Search
  • Follow NativePlanet
Share

சந்திபூர் - சமுத்திரம் மறையும் இடம்!

14

சந்திபூர் என்ற கடற்கரை ரிசார்ட், ஒடிசாவில் உள்ள பாலேஷ்வர் மாவட்டத்தில், பாலேஷ்வர் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் கடல் ஒரு தனி வகையாக விளங்குகிறது. இங்கு இயற்கையின் விசித்திரமான விளையாட்டை நாம் காணலாம். அதாவது ஒரு சமயத்தில் திடீரென உள்வாங்கும் கடல் அடுத்த நொடியே உள்வாங்கிய அனைத்து இடங்களையும் மூடி விடும்.

புகழ் பெற்ற ஏவுகணை சோதனை ஏவும் தளம் இங்குள்ளது. அக்னி, ப்ரித்வி, ஆகாஷ் மற்றும் ஷௌர்யா போன்ற ஏவுகணைகள் இங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை தளத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற்றப்பின் இங்கு வரலாம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சொகுசுக்காக கர்கரையை ஒட்டி பல தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.

சந்திபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

சந்திபூரை சுற்றி பல சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் அதற்கு இது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த பசுமையான நீலகிரி குன்று, புனிதமான பஞ்சலிங்கேஷ்வர் மற்றும் ரெமுனாவில் உள்ள கிர்சோரா கோபிநாத் கோவில் ஆகியவைகள் தான் சந்திபூர் சுற்றுலாவின் முக்கிய ஈர்ப்புகள்.

சஜன்கர் என்ற தனிமை படுத்தப்பட்ட கிராமம், பிடர்கனிகாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் போன்ற தலங்கள் சந்திபூரில் இருந்து தொலைவில் இருந்தாலும் இதனை விரும்பி இங்கும் பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

சந்திபூரின் உணவு வகைகள்!

கடல் உணவுக்காக புகழ் பெற்றது சந்திபூர். நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் இறால் வகை உணவுகளை இங்குள்ள உணவகங்களில் சுற்றுலாப் பயணிகள் சுவைக்க தவறக்கூடாது. இது போக சுவை மிக்க சந்திபூர் இனிப்புகளையும் ஒரு கை பார்த்து விடுங்கள்.

சந்திபூரை அடைவது எப்படி?

பாலேஷ்வர் இரயில் நிலையம் மூலம் சந்திபூருக்கு இரயிலில் வரலாம். அங்கிருந்து டாக்சி, ஆட்டோ மூலம் சந்திபூரை வந்தடையலாம். சந்திபூரில் குளிர் காலத்தில் கடலையொட்டி குளிர்ந்த தென்றல் காற்று வீசுவதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே சிறந்த நேரமாக இருக்கும்.

சந்திபூர் சிறப்பு

சந்திபூர் வானிலை

சிறந்த காலநிலை சந்திபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சந்திபூர்

  • சாலை வழியாக
    ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து சந்திபூருக்கு பல பேருந்துகள் இயங்குகின்றன. கிழக்கு இந்தியாவில் இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவதால் பேருந்து மற்றும் டாக்சி மூலமாக பல சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இங்குள்ள சாலைகள் நன்றாக உள்ளதால் உங்கள் பயணம் சுகமாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பாலேஷ்வர் இரயில் நிலையம் தான் சந்திபூருக்கு அருகில் இருக்கும் இரயில் நிலையமாகும்.இங்கிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சீரான இரயில் சேவைகள் உள்ளது. அதனால் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் பாலேஷ்வர் இரயில் நிலையத்தை சுலபமாக வந்தடையலாம். அங்கிருந்து சாலை வழியாக 40 நிமிடங்கள் பயணம் செய்தால் சந்திபூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சந்திபூருக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் 230 கிமீ. தொலைவில் உள்ள புபனேஸ்வரில் உள்ளது. இது போக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் மூலமாகவும் வரலாம். இது சந்திபூரிலிருந்து 314 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இரண்டு விமான நிலையத்திலிருந்தும் டாக்சி அல்லது பேருந்துகள் மூலம் சந்திபூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu