சந்திபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள நீலகிரி என்ற நகரம் நீலகிரி மலைகளுக்கு அருகில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "நீல மலை" என்று அதன் பெயரே விளக்கும் வண்ணம் தான் உள்ளது.
பெயரை போலவே இம்மலையை காணும் போது நீல நிறத்தில் காட்சி அளிக்கும். இந்த மலைக்கு மேல் பஞ்சலிங்கேஷ்வர் கோவில் உள்ளது. இதற்கு அருகில் இருக்கும் அரண்மனை மற்றும் ஜகன்னாத் கோவிலும் நீலகிரியின் முக்கியமான ஈர்ப்புகளாகும்.
நீலகிரியின் அரசர்கள் மற்றும் ராணிகளால் அணியப்பட்ட அரச ஆடைகளும் பழமையான தங்கம் மற்றும் வைர ஆபரணங்களும் இந்த அரண்மனையில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இதனருகில் உள்ள தெருவோரங்களில் பல உணவு பதார்த்தங்களும் விற்கப்படுகின்றன. இந்த நகரத்திற்கு அருகே கண்ணை கவர்ந்திழுக்கும் கும்குட் அணையையும் சுற்றிப் பார்க்கலாம்.
இந்த அணைக்கு அருகே ஒரு பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் உள்ளது. நீலகிரி இனிப்புகளுக்காகவும் புகழ் பெற்றது. இங்குள்ள கச்சேரி சந்தையில் ருசியுள்ள பல இனிப்பு உணவுகளை ருசித்துப் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications