Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » நேஷனல் ரயில்வே மியூசியம்

நேஷனல் ரயில்வே மியூசியம், டெல்லி

341

டெல்லி மாநகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ‘நேஷனல் ரயில்வே மியூசியம்’ திகழ்கிறது. இது இந்திய ரயில்வேத்துறையின் நீண்ட பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக விளங்குகிறது. 1977ம் ஆண்டு பிப்ரவரி 1ம் நாள் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் டெல்லியில் சாணக்யாபுரி பகுதியில் அமைந்துள்ளது.

இந்திய ரயில்வேத்துறை வளர்ச்சி தொடர்பான 100 காட்சி அம்சங்கள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வெறும் மாதிரி அமைப்புகள், இயங்கும் அமைப்புகள், சிக்னல் இயந்திர நுணுக்க அமைப்புகள், புராதன இருக்கைகள், வரலாற்று புகைப்படங்கள் மற்றும் நூற்பதிப்புகள் ஆகியவை அடங்குகின்றன. பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் எனும் விசேட ரயில் அறை மற்றும் மைசூர் மஹாராஜா ரயில் அறை போன்றவற்றையும் இங்கு காணலாம்.

மேலும் இந்த மியூசியத்தில் ஃபேரி க்வீன் லோகமோட்டிவ், பாடியாலா ஸ்டேட் மோனோரயில், ஃபயர் என்ஜின், க்ரேன் டேங்க், கல்கா ஷிம்லா ரயில் பஸ், ஃபயர்லெஸ் ஸ்டீம் லோகமோட்டிவ், பெட்டி டிராம்வேஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் பார்க்கலாம். 

இவற்றில், உலகின் பழமையான நீராவி என்ஜின்களில் ஒன்றாக கருதப்படும் ‘ஃபேரி க்வீன்’ லோகமோட்டிவ் இயந்திரம் - கின்னஸ் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.

இந்த மியூசியத்தின் உள்ளேயே பயணிகளை சுற்றிக் காண்பிப்பதற்காக இயக்கப்படும் சிறு ரயில் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக வசீகரிக்கிறது. திங்கள்கிழமையை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இந்த ரயில் மியூசியம் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue