Search
  • Follow NativePlanet
Share

டிகா - கடற்கரை நகரம்!

13

பல வருடங்களாக வார இறுதியைக் கழிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது கோல்கட்டாவிற்கு அருகில் உள்ள டிகா நகரம். கோல்கட்டா மற்றும் கரக்பூருக்கு அருகில் உள்ள இந்நகரம் ரயில் மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

ரெட்டை கடற்கரை

இயற்கையான கடற்கரையில் இருந்து 2கிமீ தொலைவில் டிகா சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ள இரட்டை கடற்கரை அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் இருக்கும் இக்கடற்கரை எத்தனை சுற்றுலா பயணிகள் வந்தாலும் நிரம்பி வழியாமல் வசதியாக இருக்கிறது. குளிர்காலங்களில் இங்கு ஏராளமான பயணிகள் குவிகிறார்கள்.

புத்துணர்ச்சியூட்டும் விடுமுறை

மதியவேளைகளை கடற்கரையில் கழிக்க சிறந்த இடமாக டிகா திகழ்கிறது. கடல்சார் உணவுகள் பரிமாறப்படும் டிகா கடற்கரைக்கு சென்று வர அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் ஆகாது.

கேஷுவரீனா தோட்டங்கள் இங்கு நிறைய காணப்படுகின்றன. பழைய கடற்கரையில் இருந்து புதிய கடற்கரைக்கு செல்லும் வழியெங்கும் கேஷுவரீனா செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது மதிமயக்கும் கடல்காட்சியும் இருக்கிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஜுன்புர், ஷங்கர்பூர், சுபர்னரேகா நதி, தல்சாரி, மந்தார்மணி ஆகியவை அருகிலுள்ள மற்ற தளங்களாகும். குடும்ப சகிதமாகவும், ஜோடியாகவும் சென்று வர மீன்காட்சியகம், ஆராய்ச்சி மையம் என பலவகையான பொழுதுபோக்குகள் உள்ளன.

டிகாவின் கடைவீதிகள்

கடற்கரையெங்கும் உணவு, குளிர்பான கடைகள் நிரம்பி வழிகின்றன. உள்ளூர் பொருட்களும், கலாச்சார பொருட்களும் விற்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்டதைப் போல சிக்கனமான செலவில் திருப்திகரமான சுற்றுலாவை டிகா அளிக்கிறது.  

டிகா பயணப்படும் வழிகள்

அருகிலுள்ள நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் மூலமாக டிகா இணைக்கப்பட்டுள்ளது

டிகா சிறப்பு

டிகா வானிலை

சிறந்த காலநிலை டிகா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது டிகா

  • சாலை வழியாக
    கொல்கட்டாவில் இருந்தும் கரக்பூரில் இருந்தும் பேருந்து வசதி தினமும் உண்டு. டிகா செல்ல கொல்கட்டாவில் இருந்து 5மணி நேரம் ஆகிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    டிகாவில் இருந்து கொல்கட்டாவின் ஹெளரா ரயில் நிலையத்திற்கு நேரடி ரயில் இருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கட்டா சர்வதேச விமானநிலையம் மூலம் 188 கிமீ பயணம் செய்து டிகாவை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Jul,Fri
Return On
25 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Jul,Fri
Check Out
25 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Jul,Fri
Return On
25 Jul,Sat