திமாபூரில் அமைந்திருக்கும் க்ரீன் பார்க் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அருமையான சுற்றுலாதளமாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பொழுதுபோக்க தகுந்த இடமாக கருதப்படுகிறது. 'க்ரீன் பார்க்' என்ற பெயருக்கேற்றபடி பச்சைப் பசேல் என்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது.
மாநில அரசால் பராமரிக்கப்படும் தோட்டக்கலை பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கிறது க்ரீன் பார்க். பயணிகள் இங்கிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்யலாம். அதுமட்டுமல்லாது நிழல் படர்ந்த திறந்தவெளியிலோ, உணவகத்திலோ உணவு உண்ணலாம்.
வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் இப்பூங்கா செயல்படுகிறது. பூங்காவிற்குள் நுழைய சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு பூங்காவின் விடுமுறை நாட்களில் தனியார் நிகழ்ச்சிக்காக பூங்கா வாடகைக்கு விடப்படுகிறது.



Click it and Unblock the Notifications