Search
  • Follow NativePlanet
Share

துபாரே - யானைகளோடு சில காலம்

14

கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில், காவேரியின் கரையோரங்களில் அமைந்திருக்கும் துபாரேவின் அடர்ந்த காடுகள் யானைகள் முகாமுக்காக மிகவும் பிரபலம். இங்கு நீங்கள் ராட்சஸ உருவமும், சாந்த ஸ்வரூபமுமாய் காட்சியளிக்கும் எண்ணற்ற யானைகளை நேருக்கு நேராக சந்திக்கலாம்.

இது பாரம்பரியமாக யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் தலமாக விளங்கி வருகிறது. இத்த இடத்தில்  பயிற்றுவிக்கப்பட்ட யானைகளே,  மைசூர் மகாராஜாக்களின் ஆட்சிக் காலத்தில்   தசரா பண்டிகைகளின் போது அணிவகுப்புகளில் பயன்படுத்தப்பட்டன.

துபாரேவின் காடுகளில் யானைகள் மட்டுமின்றி புலி, சிறுத்தை, சாம்பார் மான்கள் போன்ற விலங்குகளும் உள்ளன. இங்கு வனத்துறையினரால் பயிற்றுவிக்கப்பட்ட நிறைய யானைகள் மரங்களை தூக்கிச் செல்லவும், இதர பல வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். மேலும் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானை சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை இன்பமயமாக கழிக்க துபாரேவும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களும் மிகச் சிறந்த இடங்களாகும். அதோடு கூர்க், மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு துபாரே வெகு அருகில் உள்ளதால் பயணிகள் சுலபமாக துபாரேவை அடைந்து விடலாம்.

துபாரே சிறப்பு

துபாரே வானிலை

சிறந்த காலநிலை துபாரே

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது துபாரே

  • சாலை வழியாக
    பெங்களூர், மைசூர் போன்ற கர்நாடகாவின் முக்கிய நகரங்களிலிருந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் துபாரேவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மைசூர் ரயில் நிலையம் துபாரேவிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின்னர் வாடகை கார்களின் மூலம் துபாரேவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    துபாரேவிலிருந்து மைசூர் விமான நிலையம் 75 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கோவா, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து வரும் பயணிகள் சுலபமாக துபாரே வந்தடையலாம். அதே போல் பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் 227 கிலோமீட்டரில் இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும் எந்த சிரமமுமின்றி துபாரே வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Sat
Check Out
26 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun