ஃபதேஹ்கர் என்பது கைப் சாஹர் ஏரிக்கு எதிரில் உள்ள மலைக்குன்று ஆகும். இங்கிருந்து பயணிகள் ஒட்டுமொத்த துங்கார்பூர் நகரத்தின் அழகையும் மேலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
கம்பீரமான உதய் பிலாஸ் அரண்மனை, பாதல் மஹால் மற்றும் கைப் சாஹர் ஏரியின் அழகு போன்றவற்றை இங்கிருந்து நன்றாக ரசிக்க முடிகிறது. ஒரு சிறு ஹனுமான் கோயிலும் இம்மலை உச்சியில் வீற்றிருக்கிறது. இக்கோயிலில் ஒரு விவேகானந்தர் சிலையும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications