கைபா ரவால் என்று அழைக்கப்பட்ட கோபிநாத் மஹாராஜாவால் இந்த கைப் சாஹர் எனும் செயற்கை ஏரி 1428ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல புராணக்கதைகள் மற்றும் சம்பவங்களோடு இது தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.
வரலாற்று ஆவணங்கள் மற்றும் இலக்கிய காப்பியங்கள் போன்றவற்றிலும் இந்த ஏரி குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களால் புனித ஸ்தலமாக கருதப்படும் இந்த ஏரி அவர்களுக்கான சடங்கு ஸ்தலமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு துங்கார்பூர் மன்னர்கள் இந்த ஏரியை புதுப்பித்துள்ளனர். பல அழகான அரண்மனைகளும் அற்புதமான கோயில்களும் இந்த ஏரியைச்சுற்றி அமைந்துள்ளன.
ஸ்ரீநாத்ஜி பஹவான் கோயில் எனும் பிரம்மாண்டமான கோயில் இந்த ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது. இது பல கோயில்கள் இணைந்த ஒரு தொகுப்பு வடிவமாக உள்ளது. இவற்றின் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள விஜய் ராஜராஜேஷ்வர் கோயில் துங்கர்பூர் சிற்பக்கலைஞர்களின் கலை நேர்த்திக்கு சான்றாக எழுந்து நிற்கிறது.



Click it and Unblock the Notifications