மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில் சிர்ஹிந்த்-சண்டிகர் சாலையில் உள்ள அட்டேவாலி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மாதா சக்ரேஷ்வரி தேவி பற்றிய உள்ளூர் கதை ராஜபுதன மன்னர் பிரித்விராஜ் சௌஹான் காலம் நோக்கி நீள்கிறது.
அதன்படி, ஜைன யாத்ரீகர்கள் சிலர் மாட்டு வண்டியில் ஜைனக்கோயிலை நோக்கிய பயணம் மேற்கொண்டதாகவும், செல்லும் வழியில் மாதா சக்ரேஷ்வரி தேவி சிலை ஒன்றை அவர்கள் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாதா மாதா சக்ரேஷ்வரி தேவி ஆதிநாதரின் தீவிர பக்தையாவார்.
பயண வழியில் ஓரிடத்தில் இரவைக்கழித்த இந்த யாத்ரீகர்கள் காலையில் திரும்பவும் புறப்பட முயன்றபோது அந்த மாட்டு வண்டியானது இருந்த இடம் விட்டு நகரவேயில்லை.
அப்போது வானத்திலிருந்து ஒலித்த அசரீரீ ‘இந்த இடத்தையே எனக்கான கோயிலாக மாற்றுங்கள்’ என்று கூறியது மட்டுமல்லாமல், அந்த வறண்ட பூமியில் ஒரு நீரூற்றும் பீறிட்டது.
இதுவே இந்த மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில் உருவாகிய கதையாகும். ஒவ்வொரு வருடமும் துஷேரா திருவிழா முடிந்த நான்காவது நாள் இங்கு ஒரு மதச்சடங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications