ஷாஹிர்த் டி மஸார் எனும் இந்த கல்லறையானது பிரபல கட்டிடக்கலைஞரான உஸ்தாத் சையத் கான் அவர்களின் சிஷ்யரான காஜா கான் என்பவருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
தனது குருவைப்போன்றே இந்த காஜா கான் அவர்களும் கட்டிடக்கலையில் புகழ் பெற்று விளங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த கல்லறை வளாகம் முழுதும் கட்டிக்கலை அலங்கார அம்சங்களால் நிரம்பியுள்ளது.
இங்குள்ள ஓவியங்களில் சில அழிந்து காணப்பட்டாலும் மிச்சமிருப்பவை கடந்து போன காலத்தில் கலைப்பாரம்பரியத்துக்கு சான்றுகளாக பார்வையாளர்களை கவர்கின்றன. தலானியன் மக்பாரா என்றும் அழைக்கப்படும் இந்த கம்பீரமான கல்லறை வளாகம் டெல்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறையை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications