பல புரதான மற்றும் நவீன கோயில்களுக்கு பிரசித்தமான இந்த ஹர்த்தி எனும் சிறு நகரம் கர்நாடகாவில் கடக் பகுதியில் உள்ளது. சாளுக்கிய வம்ச ஆட்சியின் போது கட்டப்பட்ட பார்வதி பரமேஷ்வரா கோயில் அல்லது ஷீ உமா மஹேஷ்வரா கோயில் என்று அழைக்கப்படும் புராதன கோயில் இங்குள்ளது.
ஹர்த்தி இங்குள்ள குறிப்பிடத்தக்க மற்றொரு கோயிலான பசவேஷ்வரா கோயிலுக்கும் பிரசித்தமாக உள்ளது. சிரவண மாதத்தின் கடைசி திங்கள் கிழமையின் போது இங்கு வருடாந்திர ஜாத்ரா திருவிழா கொண்டாடப்படுகிறது. அச்சமயம் தியாமம்மா சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் அற்புதமான காட்சியைக்காண்பதற்காக பயணிகள் ஹர்த்திக்கு கண்டிப்பாக விஜயம் செய்ய வேண்டும்.
இங்கு ஒரு சிறிய மசூதியும் உள்ளது. வருடத்தின் கடைசியில் இந்த மசூதியில் மொஹர்ரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஹிந்து மற்றும் முஸ்லிம் மதத்தாரிடையே ஒற்றுமையும் மற்றும் எல்லா பண்டிகைகளையும் இரு தரப்பாரும் சேர்ந்தே கொண்டாடும் பாரம்பரியமும் இங்கு காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications