கடக்’கிலுள்ள திரிகூடேஸ்வர கோயில் வளாகத்தில் இந்த சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. சாளுக்கிய கலை அம்சங்கள் நிறைந்து காணப்படும் இந்த கோயிலில் மிக நுட்பமான அலங்கார சிற்பச்செதுக்கல்களுடன் காணப்படும் தூண்களும், அற்புதமாக செதுக்கப்பட்டுள்ள விதானமும் குறுக்கு உத்தரங்களும் காணப்படுகின்றன.
சில மூர்க்கர்களின் செயலால் இங்கிருந்த சரஸ்வதி சிலை சேதப்படுத்தப்பட்டு தற்சமயம் அதே போன்ற புதிய சிலை கோயிலுக்கருகில் வைக்கப்பட்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியாரின் சிலை ஒன்றையும் இங்கு காண முடிகிறது.
சரஸ்வதி கோயிலைத்தவிர வேறு சில கோயில்களும் இதே வளாகத்தில் உள்ளன. இங்கு காணப்படும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்காகவே இது அவசியம் காணவேண்டிய ஒரு ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications