கடக் மாவட்டத்திலுள்ள குர்த்தகோடி எனும் கிராமம் இங்குள்ள கோயில்களுக்கு மிகவும் பிரசித்தமாக உள்ளது. ஷீ உக்ர நரசிம்ம கோயில், விருபாக்ஷ கோயில் மற்றும் தத்தாத்ரேய கோயில் போன்றவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும்.
இவை தவிர ராமர் கோயில், அல்லாம் பிரபு மடம் போன்றவையும் இந்த கிராமத்தில் உள்ளன. ராமர் கோயிலில் ஷீ ராமா, லட்சுமணா, சீதா போன்ற சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் ஷீ பிரம்மானந்த மஹராஜ் என்ற யோகியால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆன்மீக யாத்ரீகர்கள் விரும்பக்கூடிய கோயில்களும் அது சார்ந்த அம்சங்களும் இந்த ஸ்தலத்தில் நிரம்பியுள்ளன.