ஹிமாலயன் ஜூ பார்க் என்று அழைக்கப்படும் இந்த விலங்கியல் பூங்கா காங்க்டோக் நகரத்திற்கு 8 கி.மீ முன்னதாக அமைந்திருக்கிறது. 205 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த பூங்கா புல்புலே பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு விலங்கினங்கள் திறந்தவெளி வசிப்பிடங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
குரைக்கும் மான், பாண்டா கரடி, சிறுத்தைகள், திபெத்திய ஓநாய்கள், புனுகுப்பூனை, ஹிமாலய கருங்கரடி மற்றும் பல விலங்குகளை இந்த விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்கள் பார்த்து மகிழலாம். குஷ் மற்றும் உர்பாஷி என்று அழைக்கப்படும் இரண்டு விசேஷமான பனிச்சிறுத்தைகளையும் இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications