கிர்னார் மலையில் உள்ள பாவ்நாத் மகாதேவ் கோவில் சிவபெருமானுக்கான கோவிலாகும். நிர்வாணா சாமியார்கள் சிவராத்திரியை கொண்டாட இங்கே வருவார்கள். சிவபெருமானும் சிவராத்திருக்கு இங்கே வருவதுண்டு என்று நம்பப்படுகிறது.
அதோடு இங்குள்ள சிவலிங்கம் தானாக உருவான சுயம்புலிங்கம் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானும் பார்வதி தேவியும் இந்த மலையில் நடந்து செல்லும் போது அவர்களின் புனிதமான ஆடையில் ஒரு பகுதி தவறி இங்குள்ள மிர்கி குந் என்ற இடத்தில் விழுந்ததாலே இந்த இடம் இந்த புனித தன்மையை பெற்றிருக்கிறது என்றும் புராண வழி நம்பிக்கை ஒன்று நிலவுகிறது.



Click it and Unblock the Notifications