காளிகா கோவில் கிர்னார் மலையின் ஒரு உச்சியான பவர்கர்ஹ் என்ற இடத்தில் உள்ளது. இது ஹிந்து மற்றும் இஸ்லாமியகள் என இரண்டு மதத்தினருக்கும் புனித ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த கோவில் காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள இறைவன் நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் ஒரு அரக்கனின் தலையும் இருக்கும்.
மற்ற இரண்டு கைகளும் ஆசீர்வதிக்கும் தொனியில் அமைந்திருக்கின்றன. நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி வாய்ந்த கடவுளாக பக்தர்கள் இக்கடவுளை பார்க்கின்றனர். காளிகா தேவியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications