வஷிஷ்டி ஆறு அரபிக்கடலுடன் கலக்கும் இடத்தில் இந்த அஞ்சன்வேல் கிராமம் அமைந்துள்ளது. புரதானமான மீன்பிடி கிராமமான இது துறைமுகமாகவும் உள்ளது.ஒரு துறைமாக இருப்பதால் இது கப்பல் கட்டுதல், கப்பல் பராமரிப்பு, பழைய கப்பல்களை உடைத்தல் போன்ற பணிகளின் கேந்திரமாக விளங்குகிறது.
அதே சமயம் ஒரு முக்கிய மீன்பிடி மையமாகவும் உள்ளதால் பயணிகள் மீன்பிடிப்பு முறைகள், மீன்பிடி படகுகள் பற்றி ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.
ஒரு முகத்துவார(உப்பங்கழி) தீவு போன்று காணப்படும் இந்த அஞ்சன்வேல் கிராமம் தன் அடர்ந்த பசுமையுடன் கூடிய இயற்கை அழகுக்காகவும், உயர்ந்த மலைப்பகுதிகளுக்காகவும் மற்றும் வருடந்தோறுமே நிலவும் இனிமையான சீதோஷ்ண நிலைக்காகவும் ஒரு வித்தியாசமான சுற்றுலாஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
மேலும் இங்குள்ள மீனவ சமூக மக்களை நேரில் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு அம்சமாகும்.



Click it and Unblock the Notifications