வேல்நேஷ்வர், குஹாகர்

குஹாகர் கிராமத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இந்த வேல்நேஷ்வர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயராலேயே அழைக்கப்படும் அழகிய கடற்கரைக்கு இந்த கிராமம் புகழ்பெற்றுள்ளது.

ஷாஸ்த்ரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பெரும்பான்மையாக மீனவ சமூகத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமம் இயற்கை எழிலுடனும் சுத்தமாகவும் காட்சியளிக்கின்றது.

இங்குள்ள வேல்நேஷ்வர் கடற்கரை முக்கியமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது.வனப்புடன் காணப்படும் இந்த கடற்கரை அருகில் தென்னந்தோப்புகள் சூழ்ந்திருக்க இயற்கைக்கவர்ச்சியுடன் காணப்படுகிறது.

வெண்ணிறமான தூய மணற்பரப்புடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் நீச்சல், விசைப்படகுச்சவாரி போன்ற நீர்விளையாட்டு பொழுதுபோக்குகள் நிறைந்துள்ளன.

குஹாகர் ஹெத்வி சாலையில் அமைந்துள்ள இந்த கிராமம் இங்குள்ள ஒரு சிவன் கோயிலுக்கும் புகழ் பெற்றுள்ளது. கொகனஸ்த சித்பவன் பிராமணர்களின் குலதெய்வமாக விளங்கும் இந்தக்கோயிலுக்கு மஹாசிவராத்திரியின்போது ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோயிலின் முன்பகுதியில் மிகப்பெரிய தீபமால் ஒன்றும், அருகில் காலபைரவர், கணேசர், சிவன் போன்ற தெய்வங்களுக்கான சிறு கோயில்களும் உள்ளன.

Please Wait while comments are loading...