ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் கிராமத்தில் இந்த வியாதேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. குஹாகர் கடற்கரையை போன்றே இதுவும் குஹாகர் மஹாராஷ்டிரா அரசுப் பேருந்துப் பணிமனைக்கு அருகில் அமைந்துள்ளது.
சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் தால்கேஷ்வர், உடலேஷ்வர் மற்றும் பால்கேஷ்வர் போன்ற சிவன் அவதாரங்களின் சிலைகள் உள்ளன. கணேஷ் கடவுள், ஷீதேவி, விஷ்ணு மற்றும் சூரியக் கடவுளின் சிலைகளும் இங்கு உள்ளன.
மஹாசிவராத்திரி சுபதினத்தின்போது இந்த கோயிலில் சிவனுக்கான விசேட பூஜை மற்றும் திருவிழா நடைபெறுகிறது. அச்சமயம் ஒரு பொருட்காட்சி சந்தையும் சிறப்பாக இங்கு நடத்தப்படுவதால் உள்ளூர் கலாச்சாரத்தின் அம்சங்களை பயணிகள் சிறப்பாக கண்டுகளிக்கலாம்.



Click it and Unblock the Notifications