கேரளாவில் மிகப்பிரசித்தமான இந்த சிவன் கோயிலானது 108 சிவாலயங்களில் ஒன்று எனும் பெருமையை பெற்றுள்ளது. குருவாயூருக்கு அருகில் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது.
சிவனுக்கான கோயில் என்றபோதிலும் இந்த கோயிலின் வாசற்பகுதியிலேயே திருவம்பாடி கிருஷ்ண பஹவானின் சிலையை பக்தர்கள் தரிசிக்கலாம். இங்குள்ள சிவலிங்கம் மிக விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. சிவராத்திரி திருவிழா இந்த கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய உற்சவமாகும்.
ஆன்மீக பிரகாசத்துடன் அமைதியான சூழலில் வீற்றிருக்கும் இந்த கோயிலுக்கு குருவாயூர் வரும்போது மறக்காமல் விஜயம் செய்வது நல்லது. மனதுக்கு சாந்தி தரும் தெய்வீக சக்தியை இங்கு பக்தர்களும் பயணிகளும் பெறலாம்.



Click it and Unblock the Notifications