Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » ஹஸர ராமர் கோயில்

ஹஸர ராமர் கோயில், ஹம்பி

84

ஹம்பி அரண்மனைப்பகுதியின் மையத்தில் உள்ள இந்த ஹஸர ராமர் கோயில் ஹம்பியில் உள்ள முக்கியமான கலை அம்சங்களில் ஒன்றாகும்.  முக்கியமான சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு இந்த கோயில் பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

ராமாயண இதிகாச நிகழ்ச்சிகள் இந்த கோயிலில் புடைப்பு சிற்பங்களாக படைக்கப் பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். ஹம்பி பிரதேசத்திலேயே விஷ்ணுக்கடவுளுக்கான மிகப் பெரிய கோயில் இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த கோயிலின் சுவர்களில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த கலைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், குதிரைகள், போர்வீரர்கள், நடனமாடும் மங்கையர் போன்றவற்றின் சிற்பங்கள் அவற்றில் அதிகம் காணப்படுகின்றன.

ஹஸர ராமர் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் பளிங்கு கல்லில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்ட நான்கு அலங்கார தூண்களும் உள்ளன. மேலும் இந்த கோயிலின் சுற்றுச்சுவரின் வெளிப்பகுதியிலும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணபடுகிறது.விஷ்ணு பஹவானின் ஒன்பதாவது அவதாரம் என்று கருதப்படும் புத்த பஹவானின் உருவமும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஹஸர ராமர் கோயில் அருகிலேயே உள்ள ஜனனா (அந்தப்புர பகுதி)அரன்மணை வளாகத்தில் அமைந்துள்ள லோட்டஸ் மஹால் போன்றவையும் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஹஸர ராமர் கோயிலையும் அதில் நிரம்பி வழியும் புராதன கட்டிட சிற்பக்கலை மற்றும் பண்பாட்டியல் அம்சங்களை பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொருவருக்கும் அக்காலத்திய விஜய நகர ஆட்சியின் நாகரிகம் எந்த அளவுக்கு சீர் பெற்று விளங்கியது என்பது மிக எளிதாக புரியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed