ஒரு பிரம்மாண்ட சதுர பீடமாக உயர்ந்து காணப்படும் இந்த அமைப்பு ஹம்பியில் பிரசித்தி பெற்ற அம்சங்களில் ஒன்றாகும். இந்த நினைவுச்சின்னம் கிருஷ்ணதேவராய மன்னரால் தேவகிரியை(இப்போதைய ஒரிஸ்ஸா) வென்ற வெற்றியின் ஞாபகார்த்தமாக எழுப்பப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஹம்பி அரண்மனை வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னம் எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தெரியும்படி இதன் உயரம் அமைந்துள்ளது.
நாலாபுறங்களிலும் வெளிச்சுவற்றில் பல்வகையான அலங்கார சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பீடம் ஒரு அற்புதமான புராதன நினைவுச் சின்னமாகும். ஆகவே ஹம்பியில் கண்டிப்பாக சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய ஒரு இடம் இந்த மஹாநவமி திப்பா.இதன் வெளிப்புறச் சுவற்றில் குதிரைகள், யானைகள், மற்றும் யுத்த வீரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதன் உச்சியில் ஏறுவதற்கு இரண்டு தனி படிக்கட்டு அமைப்புகள் உள்ளன. ஒன்று முன்புறமும் மற்றொன்று பின்புறமும் காணப்படுகிறது. இந்த பீடத்தின் உச்சியிலிருந்து சுற்றுப்புறத்தின் இயற்கை அழகையும் இதர சின்னங்களையும் பார்த்து ரசிக்க முடிகிறது.
வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி இந்தப் பீடமானது அக்கால அரசர்கள் தங்கள் படை நடமாட்டத்தை பார்வையிடவும், நவராத்திரி போன்ற முக்கிய விழாக்கொண்டாட்டங்களை பார்த்து ரசிக்கவும் இந்த பீடத்தை பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications