Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாசன் » ஈர்க்கும் இடங்கள் » ஒம்பத்து குட்டா

ஒம்பத்து குட்டா, ஹாசன்

11

ஹாசன் நகருக்கு வருகை தரும் பயணிகள் மலைஏற்றத்தில் விருப்பம் இருந்தால் இந்த ஒம்பத்து குட்டா (ஒன்பது மலை) என்ற மலைஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த சிகரத்தில் ஒன்பது உச்சிகள் போன்ற மேடுகள் அடுத்தடுத்து  தென்படுவதால் இந்த பெயர் வந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 971 மீட்டர் உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

மேலும் இந்த மலையானது ‘கப்பினலே வனப்பாதுகாப்பு சரகம்’, ‘ஷிரடி  ஷிரிஸ்லா வனப்பாதுகாப்பு சரகம்’ மற்றும் ‘பாலூர் வனப்பாதுகாப்பு சரகம்’ போன்ற வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மலைஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் உள்ளூர் மக்களிடம் வழி கேட்கும் போது முர்கல் குட்டா என்ற உள்ளூர் பெயரை சொல்லி கேட்பது நல்லது. இது கப்பினல்லே வனப்பகுதிக்குள் உள்ள குண்டியா சோதனைச்சாவடியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஒம்பத்து குட்டா அடிவாரம் வரை ஜீப் மூலமாக பயணிகள் செல்லலாம். அப்படி பயணிக்கும்போது காட்டு மிருகங்களான சிறுத்தை, குரைக்கும் மான், கரசி, புலி, காட்டு யானை, காட்டெருமை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புண்டு.

இந்த ஜீப் பாதை கப்பிஹோலே ஆற்றின் ஓரமாகவே செல்கிறது. இங்கு டைவிங் எனப்படும் ‘சாகச கயிறு குதிப்பு’ தளங்களும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed