Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள் » அஷ்டபட்

அஷ்டபட், ஹஸ்தினாபூர்

21

அஷ்டபட் எனும் சொல்லுக்கு எட்டு படிகள் என்பது பொருளாகும். ஜைன ஆகமங்களின்படி ஹிமாலயத்தின் பனி படர்ந்த மலைகளில் இது போன்ற அஷ்டபட் எனும்  படி அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பத்ரிநாத் ஸ்தலத்திற்கு வடக்காக 168 மைல் தூரத்தில் கைலாஷ் பர்வதம் செல்லும் வழியில் இந்த அஷ்டபட் அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது சீன நாட்டிற்கு சொந்தமாக உள்ள மானசரோவர் ஏரியிலிருந்து 7 மைல் தூரத்தில் இது அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

புராணக்கதைகளின்படி, முதலாம் தீர்த்தங்கரரான பகவான் ரிஷபதேவர் இந்த இடத்தில் முக்தியடைந்ததாக சொல்லப்படுகிறது. அவரது மகனான மஹாராஜா பாரத் சக்ரவர்த்தி அஷ்டபட் மலையின்மீது ஒரு அரண்மனையை உருவாக்கி அதனை வைரங்களால் அலங்கரித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த அஷ்டபட் ஸ்தலத்திற்கு விஜயம் செய்பவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் ஹஸ்தினாபூர் பகுதியில் அஷ்டபட் புனிதஸ்தலத்தின் நகல் வடிவத்தினை உருவாக்கியிருக்கின்றனர். இந்த ஹஸ்தினாபூர் நகரம் முதலாம் தீர்த்தங்கரர் அவதரித்த ஸ்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அற்புதமான தீரத் அமைப்பு 25 கோடி பொருட்செலவில் 20 வருடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரம்மாண்ட அமைப்பின் அடித்தளம் 151 அடி உயரமும் 108 அடி விட்டமும் கொண்டதாக நான்கு நுழை வாயில்களுடன் காணப்படுகிறது.

151 அடி உயரம் கொண்ட எட்டு படிகள் அல்லது அடுக்குகளை கொண்ட  மொத்த அமைப்பாக இந்த அஷ்டபட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed