ஹஸ்தினாபூர் நகரத்திலுள்ள கரண் கோயில் மஹாபாரத காலத்திலேயே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது சிவனுக்காக எழுப்பப்பட்டதாகும். ஐதீகங்களின்படி இங்கு கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்கம் பாண்டவர்களின் மூத்த சகோதரனான தன்வீர் கரண் (கர்ணன்) என்பவரால் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இவர் மிகச்சிறந்த வள்ளலாக அக்காலத்தில் புகழ் பெற்றுள்ளார். இவரது வீரம் மற்றும்கொடைத்தன்மை பற்றி ஏராளமான கதைகள் மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன. கங்கை நதிக்கரை அருகே ஒரு குன்றின்மீது இந்த கோயில் அமைந்திருக்கிறது.
மிகச்சிறிய ஒற்றை அறைக்கோயிலாக காணப்பட்டாலும் இந்த கோயிலுக்கு ஏராளமான யாத்ரீகர்கள் விஜயம் செய்கின்றனர். அடர்த்தியான இளஞ்சிவப்பு வண்ணம் இக்கோயிலுக்கு பூசப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டமைப்புகளை சேர்த்து இந்த கோயிலை புதுப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications