தேசிய நெடுஞ்சாலை எண்10ல் உள்ள தாமஸ் தேவாலயம் 1860ல் துவங்கி 1864ல் கட்டி முடிக்கப்பட்டது. இயேசு க்றித்துவின் 12சீடர்களுல் ஒருவரான தாமஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இத்தேவாலயத்தைக் கட்ட அந்த காலகட்டத்தில் ஆன செலவு ரூபாய் 4500 ஆகும்.
1865, டிசம்பர் 31ல் இப்புனித கோவில் கல்கட்ட பிஷப் ஜார்ஜ் எட்வர் காட்டன் என்பவரால் துவக்கிவைக்கப்பட்டது. விக்டோரியா காலத்து கட்டிடக்கலைகளை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் பீடம், போதனைகளுக்கான மேடை, பாவமன்னிப்பு திரை, திருமுழுக்கிற்கான இடம் என தனித்தனியாக இடங்கள் உண்டு
போதனை மேடை வழுவழுப்பான துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் பிரதான அரங்கு இரண்டு தடிமனான சுவர்களால் மூடப்பட்டு, 40 பேர் வசதியாக அமரும் வண்ணம் சுமார் 1325சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.
இத்தேவாலயத்தின் மணி 1874ல் ரூர்க்கியில் செய்யப்பட்டது. தேவாலய வளாகத்தின் உள்ளயே சில கல்லறைகளும் உள்ளன. 1857ல் இந்திய வீரர்களால் குடும்பத்துடன் கொல்லப்பட் ஜான் வெட்டர்பெர்ன் என்ற ஹிசார் மாவட்ட கலக்டரின் உடல் உள்ளது.
1899 வரை க்றித்தவர்கள் மட்டுமே தேவாலயத்தின் உள்ளே வழிபட முடியும். இத்தேவாலயத்தின் 100வது ஆண்டுவிழா டெல்லி பிஷப்பால் ஜனவரி8, 1966ல் கொண்டாடப்பட்டது.



Click it and Unblock the Notifications