ஜெயின்டியா நிலப்பகுதியை பிரிட்டிஷாரிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் மரணமடைந்த யூ கியாங் நோங்பா என்ற தேசபக்தரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடம் தான் கியாங் நோங்பா நினைவுச் சின்னமாகும்.
மிண்டு நதி ஓடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிண்டு க்ஸியர் என்ற இடத்தின் அருகில் உள்ள மாடியாஹ் க்மாய் ப்ளாய் என்ற பெரும் நிலப்பகுதியின் மையத்தில் இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் யூ கியாங் நோங்பா பிரிட்டிஷாரிடம் எந்தவித பயமும் இல்லாமல், தன்னுடைய நாட்டிற்காக போராடுவதற்கு உறுதி மொழி எடுத்தார். அதனால் இந்த இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேசபக்த செயல்வீரரின் தியாகத்தைக் காண்பதற்காக இங்கு வருவது வழக்கம். ஷில்லாங் அல்லது ஜோவாயில் இருந்து ஒரு பேருந்தையோ அல்லது வாடகை காரிலோ கியாங் நோங்பா நினைவுச்சின்னத்தை எளிதில் அடைய முடியும்.



Click it and Unblock the Notifications