தேவி தலாப் மந்திர், ஜலந்தர்

தேவி தலாப் மந்திர் எனும் பிரசித்தமான இந்த ஆன்மிகஸ்தலம் ஜலந்தர் நகர ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

நாட்டுப்புற கதைகளின்படி, தேவியின் வலது மார்பு இந்த ஸ்தலத்தில் விழுந்ததாக கருதப்படுகிறது. 200 வருடங்கள் பழமையான இந்த கோயிலில் துர்க்கை வடிவில் சக்தி வீற்றுள்ளார். 

ஒரு தீர்த்தக்குளத்தையும் கொண்டுள்ள இந்த கோயிலில் பிஷான் பைரவ் (சிவன்) சிலையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் ஹரிவல்லப் சங்கீத் சம்மேளன் எனும் இசை நிகழ்ச்சி இந்த கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், கண்டு ரசிக்கவும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.

மேலும், இந்த கோயிலுக்கு அருகிலேயே ஒரு காளி கோயிலும் அமைந்திருக்கிறது. அமர்நாத் குகைக்கோயிலைப்போன்று இந்த தேவி தலாப் மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...