ஷிவ் மந்திர், ஜலந்தர்

ஷிவ் மந்திர் எனப்படும் இந்த கோயில் குர் மண்டி எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இது சுல்தான்பூர் லோதி நவாப் ஆட்சிக்காலத்தின்போது கட்டப்பட்டிருக்கிறது.

வழங்கப்பட்டு வரும் கதைகளின்படி, இந்த நவாப் திருமணமான ஒரு ஹிந்துப்பெண் மீது மோகம் கொண்டதாகவும் தீவிர சிவபக்தையான அந்த பெண் பாசுகி எனும் தெய்வப்பாம்பால் காப்பாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் மனந்திருந்திய அந்த நவாப் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த பெண்ணின் கட்டளைப்படி இந்த சிவன் கோயிலை கட்டியதாகவும் அந்த கூறுகிறது. இந்த கோயிலின் முன் வாசல் அமைப்பு ஒரு மசூதியை போன்றும் இதர கட்டமைப்புகள் இந்திய ஹிந்து கோயிற்கலை பாணியிலும் கட்டப்பட்டிருப்பது ஒரு விசேஷ அம்சமாகும்.

Please Wait while comments are loading...