கர்தர்பூர் குருத்வாரா எனப்படும் இந்த சீக்கியக்கோயில் ஷீ ஹர்கோபிந்த் சாஹிப்ஜி அவர்களால் கட்டப்பட்டதாகும். இது ஜலந்தர் நகரத்துக்கு வடமேற்கே 16 கி.மீ தூரத்தில் கர்தர்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்த குருவின் பிறந்தநாளின்போது ஒரு பிரசித்தமான திருவிழா இந்த குருத்வாரா வளாகத்தில் நடத்தப்படுகிறது. ஒரு காலத்தில் நீர் நிரம்பிய ஊற்றாக விளங்கிய சௌபச்சா எனும் புனிதக்கிணற்றை இந்த குருத்வாரா வளாகத்தில் பயணிகள் காணலாம்.
ஸ்ரீ சௌபச்சா சாஹிப் என்ற பெயராலும் இந்த குருத்வாரா அழைக்கப்படுகிறது. ஷீ ஹர்கோபிந்த் சாஹிப்ஜி குருவானவர் ஜர்னயில் பைண்டே கான் என்பவரோடு சதுரங்கம் விளையாடிய ஸ்தலமாக இது கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications