ஜி.டி ரோடு சாலையில் அமைந்துள்ள இந்த ரங்க்லா பஞ்சாப் ஹவேலி எனும் சுற்றுலா அம்சம் பஞ்சாப் மாநிலத்தின் கிராமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு ‘தீம் வில்லேஜ்’ (மாதிரி கிராமம்) ஆக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வளாகத்தில் பாரம்பரிய உடைகளை அணிந்த தோற்றத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ரங்க்லா பாரம்பரியத்துக்குரிய டெஹ்மத் குர்த்தாக்கள் மற்றும் புல்கரி மேலங்கி அணிந்த சேவகர்கள் இங்கு பார்வையாளர்களை வரவேற்கின்றனர். பஞ்சாபி மற்றும் பாங்க்ரா போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.
இவை தவிர பலவகையான பஞ்சாபி உணவுகளையும் இங்கு ருசி பார்க்கலாம். பார்வையாளர்களுக்காக தினமும் இங்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இப்பகுதியின் கலாச்சாரத்தை விளக்கும் சில அரிய புகைப்படங்கள் மற்றும் உள்ளூர் இசைக்கருவிகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications