கரீப் ஷா தர்கா, ஜம்முவில் உள்ள ஒரு புகழ்பெற்ற தர்க்காவாகும். இது கரீப் ஷா என்ற முஸ்லீம் துறவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அவர் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை பிரசாரம் செய்தபடியால் மக்கள் மத்தியில் நன் கு அறியப்பட்டார். இதன் காரணமாக கரீப் ஷா தர்கா முஸ்லீம் மற்றும் இந்து சமூகத்தினை சேர்ந்த இரு மதத்தினரும் வருகை தருகின்றனர்.
உள்ளூர்வாசிகள் இந்த புனிதருக்கு தெய்வீகத்தன்மை இருப்பதால் அங்கு வரும் மக்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர். இதன் தனித்தன்மை என்னவென்றால் இந்த புனித கல்லறையானது உள்ளூர் இந்து சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால், கரீப் ஷா தர்கா, வேற்றுமையிலும் ஒற்றுமைக்கு ஒரு சரியான அடையாளமாக திகழ்கிறது. இயந்திரமான நகர்ப்புற வாழ்க்கையை விட்டு சற்று அமைதியை கழிக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications