ஹரி சந்தை, ஜம்மு பகுதியில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் பகுதியாகும். ஜம்முவின் முன்னாள் ஆட்சியாளர் ஹரிசிங்க் என்பவரது பெயரால் இது பெயரிடப்பட்டது. ஹரி சிங், ஜம்மு காஷ்மீரின் கடைசி மன்னர். ஜம்மு காஷ்மீரை சுதந்திர இந்தியாவுடன் இணைப்பதில் இவர் காட்டிய அக்கறை மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் ஹரி சந்தையை அதன் உலர் பழங்கள், காஷ்மீரி கைவினை பொருட்கள், மற்றும் டோக்ரா நகைகள் போன்றவற்றை வாங்குவதற்காக வருகை தருகின்றனர். எல்லா பொருட்களையும் விட உலர் பழங்க்ளே ஹரி சந்தையில் பிரசித்து பெற்றவை.
உலர் பழங்களை தவிர, உலர் மாம்பழம், பாசுமதி அரிசி மற்றும் ராஜ்மா அல்லது கிட்னி பீன்ஸ் முதலியன இந்த சந்தையில் அதிக அளவில் விற்பனையாகின்றன.
உள்ளூரின் பிரபல பால் இனிப்பு பொருளான பர்பிக்கும் இந்த சந்தையானது மக்கள் மத்தியில் அறியப்படுகிறது. மற்ற பொதுவாக விற்பனை செய்யப்படும் பொருட்களாவன; கையால் பின்னப்பட்ட கம்பளி போர்வைகள், பாஷ்மினா சால்வைகள் மற்றும் பட்டு முதலியன.



Click it and Unblock the Notifications