வராஹா என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. இதற்கு பன்றி என்று பொருளாகும். வேதநூல்களின் படி, இது மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.
இரண்யகசிபு என்ற அரக்கன் மனித வடிவிலிருந்த பூமா தேவியை கடத்தியதன் மூலம் பூமியை திருடி கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டார். இதனை அறிந்த மகா விஷ்ணு கடலுக்கடியில் இருந்த பூமியை பன்றி வடிவத்தில் மீட்டுக் கொண்டு வந்தார். வராஹ அவதாரத்தில் தலை பன்றியின் தலையாகவும், உடல் மனித உருவத்திலும் இருக்கும்.
ஜின்ட் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பாரா என்ற கிராமத்தில் மகா விஷ்ணுவிற்கான வராஹ தீர்த்தம் உள்ளது. மகா விஷ்ணு பன்றி வடிவம் எடுத்த போது இந்த இடத்தில் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
எனவே, இந்த வழிபாட்டுத்தலத்தின் குளத்தில் நீராடினால் மகா விஷ்ணுவின் அருள் கிடைக்கும். இந்த இடத்தில் யாராவது தங்கியிருந்தால் அக்னி ஸ்தோமா செய்த பலன் கிடைத்துவிடும்.
அக்னி ஸ்தோமா என்பது நெருப்புக் கடவுளுக்கு செய்யும் பிரார்த்தனையான இது தொடர்ச்சியான நாட்களில் செய்யப்பட வேண்டிய செயலாகவும் மற்றும் ஒரு விலங்கினை பலி கொடுப்பதுடன் முடிவுறுவதாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications