மஹாதேவா கோயில், காலடி

காலடி கிராமத்துக்கு வெகு அருகில் ஆலுவா நகருக்கு தெற்கே அமைந்திருக்கும் திருவாணிக்குளம் மஹாதேவா கோயில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகும்.

இந்தக் கோயிலில் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பார்வதி அம்மனுக்கு ஒரு தனி சன்னதியும், விநாயகர், ஐயப்பன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு சிறிய ஆலயங்களும் உள்ளன.

மஹாதேவா கோயிலின் கருவறை பார்வதி ஸ்ரீகோலி என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்தக் கருவறை வருடத்தில் வெறும் பன்னிரண்டு நாட்கள் திருவாதிறை திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமே திறக்கப்படும். அப்போது மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

Please Wait while comments are loading...