Search
  • Follow NativePlanet
Share

கல்னா – கோயில்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள்

8

கல்னா அல்லது அம்பிகா கல்னா என்று அழைக்கப்படும் என்று அழைக்கப்படும் இந்த நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில்  அமைந்துள்ளது. மா அம்பிகா அல்லது அன்னை அம்பிகா என்று வணங்கப்படும் காளி தேவிக்காக இந்த ஸ்தலம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

ஹிந்துக்கள் மத்தில் முக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்கும் இந்த கல்னா நகரத்தில் சில முக்கியமான வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ளன.

அது மட்டுமல்லாமல் ராஜ்பரி எனப்படும் அரண்மனை ஒன்றும் இந்நகரத்தின் பிரதான அம்சமாக அமைந்திருக்கிறது. பிரசித்தமான 108 சிவன் கோயில்கள் கொண்ட கோயில் வளாகமும் இங்கு இடம் பெற்றுள்ளது.

உள்ளூர் கலாச்சாரம்!

விவசாய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்த நகர்ப்பகுதியில் தானிய வயல்கள், உருளைக்கிழங்கு மற்றும் சணல் பயிர் போன்றவற்றை பயணிக்கும்போதே சாலை ஓரத்தில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

பெரும்பாலும் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை அதிகமாக கொண்ட இந்த சமூகத்தில் ஒற்றுமையுடன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு குடிசைத்தொழில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

கோயில் நகரம்

கல்னா எனும் பெயர் கோயில் நகரம் எனும் பொருளை உணர்த்துவதாகும். இது பாபா பாக்லா எனும் குருவின் வசிப்பிடமாகவும் இருந்துள்ளது. எனவே ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு விசேஷ பூஜை ஒன்று இவரது பெயரால் இங்கு நிகழ்த்தப்படுகிறது.

இங்குள்ள 108 கோயில் அமைப்பானது ஒரே மையபுள்ளியை கொண்ட இரண்டு வட்ட வடிவ அமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு வட்டத்தொகுதியில் 74 கோயில்களும் மற்றொன்றில் 34 கோயில்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதமான நுணுக்கங்களுடன் காட்சியளிக்கின்றன.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!

சரஸ்வதி பூஜா, காளி பூஜா மற்றும் துர்க்கா பூஜா ஆகியவை இங்கு கொண்டாடப்படும் மூன்று முக்கியமான திருவிழாக்களாகும். இந்த திருவிழாக்காலத்தில் இந்த நகரத்துக்கு விஜயம் செய்ய முடிந்தால் வெகு விசேஷம்.

நான்கு நாட்கள் நடத்தப்படும் மஹிஷாசுரமர்த்தினி பூஜாவின்போது இந்த நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கின்றது. தற்காலிக கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை அக்காலத்தில் பார்க்கலாம்.

உள்ளூர் போக்குவரத்து வசதிகள்

ஆன்மிக அம்சங்கள் ஏராளம் உள்ள இந்த நகரத்தில் நடந்தே பல்வேறு அம்சங்களை சுற்றிப்பார்த்து ரசிப்பது பொருத்தமாக இருக்கும்.

கல்னா சிறப்பு

கல்னா வானிலை

சிறந்த காலநிலை கல்னா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கல்னா

  • சாலை வழியாக
    மாநில நெடுஞ்சாலை 6 மற்றும் 1 வழியாக கொல்கத்தாவிலிருந்து 92 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஆன்மீக ஸ்தலத்திற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில் மார்க்கமாக பயணம் மேற்கொள்ள வசதியாக கொல்கத்தா ரயில் நிலையம் கல்னா நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் கல்னா நகருக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் இதர பகுதிகள் மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed