கணபதியார் கோயில் செட்டி சமூகத்தினரால் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கோயில் இன்று சிதலமடைந்து காணப்பட்டாலும் இதன் சிற்பங்களும், கருங்கல் தூண்களின் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுகளும் காஞ்சிரப்பள்ளியின் ஆரம்பகட்ட தமிழ் கலாச்சார தாக்கங்களை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
கணபதியார் கோயிலை கட்டிய செட்டி சமூகத்தினர் நெசவுத் தொழில் செய்பவர்களாக பிரத்தியேகமாக அறியப்படுகிறார்கள். இவர்களின் மிகச் சிறந்த படைப்பாக கருதப்படும் காஞ்சிரப்பள்ளி கட்சா என்னும் ஜவுளி வகை இந்தியா முழுவதும் வெகுப்பிரபலம்.



Click it and Unblock the Notifications