Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » அரளம் காட்டுயிர் சரணாலயம்

அரளம் காட்டுயிர் சரணாலயம், கண்ணூர்

84

அரளம் காட்டுயிர் சரணாலயம் கண்ணூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்திலும், தலசேரி நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் உள்ளது. 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தின் தலைமை அலுவலகம் இங்கிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இரிட்டி எனுமிடத்தில் இயங்குகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் சரிவில் அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியதாக இந்த சரணாலயம் காட்சியளிக்கிறது. இங்கு பலவகையான வனவிலங்குகளும் பறவைகளும் வசிக்கின்றன. இப்பகுதியிலுள்ள உயரமான சிகரமான கட்டி பெட்டா இந்த வனப்பகுதியில் 1145 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.

இந்த சரணாலயமானது இயற்கை ரசிகர்களை பெரிதும் கவரும் விதத்தில் யானை, புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பூனை, சிறுத்தை, ஹனுமான் குரங்கு எனப்படும் முகமூடிக்குரங்கு, குரைக்கும் மான், சாம்பார், நீலகிரி லாங்குர் மற்றும் மலபார் காட்டு அணில் போன்ற பல விலங்குகள் வசிக்கும் வனப்பகுதியாக காட்சியளிக்கிறது.

இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்ய நவம்பர் முதல் ஜூன் வரையுள்ள இடைப்பட்ட காலம் பொருத்தமாக உள்ளது. மழைக்காலத்தில் இங்கு விஜயம் செய்வது கட்டாயம் தவிர்க்கவேண்டிய ஒன்றாகும்.

பறவை ரசிகர்களை பெரிதும் கவரக்கூடிய ஒரு சிறப்பம்சமாக இங்கு 215 வகையான பறவையினங்களும், 172 வகையான வண்ணத்துப்பூச்சிகளும் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்வை நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை

நுழைவுக்கட்டணம்: உண்டு

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed