ஊர்பழசிக்காவு கோயில் எனும் இந்த பிரசித்தமான ஆன்மீகஸ்தலம் ஒரு முக்கியமான வழிப்பாட்டு மையமாக அறியப்படுகிறது. கண்ணூர் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் எடக்காட் எனும் இடத்தில் இது அமைந்துள்ளது.
இந்த கோயிலின் உள் முற்றத்தில் பகவதி, ஸ்ரீ ஊர்பழசி தெய்வத்தார் மற்றும் கிரத சுன்னு என்றழைக்கப்படும் வேட்டக்கொருமகன் ஆகியோர் சிலைகள் காட்சியளிக்கின்றன. ஒரே கோயில் வளாகத்தில் சைவ, வைஷ்ணவ மற்றும் சாக்தேய கருவறைகளைக் கொண்டிருப்பதால் இக்கோயில் ஒரு அரிதான அமைப்பாக கருதப்படுகிறது.
இந்த சன்னதிகளை தவிர்த்து தொண்டச்சன் எனும் உபசன்னதியும் இங்கு பிரசித்தமாக வணங்கப்படுகிறது. பக்தர்கள் வெற்றிலைப்பாக்கு மற்றும் அவல் போன்ற நைவேத்தியங்களை வைத்து இந்த சன்னதியில் படையல் செய்கின்றனர். தற்போதைய கோயில் அமைப்பானது 19ம் நூற்றாண்டின் மத்தியில் பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களுடன் புத்துருவாக்க செய்யப்பட்டுள்ளது.
மண்டல விளக்குப்பூஜை எனும் சடங்கு 41 நாட்களுக்கு (நவம்பர்-டிசம்பர்) இக்கோயிலில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவராத்திரி மஹோத்சவம், பட்டதானம், வெள்ளாட்டம், களியாட்டம் போன்ற கூத்து நடன வடிவங்கள் மற்றும் வேட்டக்கொருமகன் பாட்டு (வேட்டக்கொருமகன் தெய்வத்தை மகிழ்விப்பதற்கான பாட்டு)எனும் இசைப்பாட்டு வடிவம் போன்றவை இக்கோயிலில் நிகழ்த்தப்படும் கோலாகலமான நிகழ்ச்சிகளாகும். ஊர்பழசி காவு கோயில் இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.



Click it and Unblock the Notifications