Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » பழசி அணை

பழசி அணை, கண்ணூர்

84

பழசி அணை கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இந்த அணைப்பகுதி தனது எழில் அம்சம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. வாலப்பட்டணம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைத்தேக்கத்தின் மூலம் கண்ணூர் பிரதேசத்தின் நீர்ப்பாசனத்தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வரலாற்றில் இடம்பெற்றுள்ள கீர்த்தி பெற்ற ராஜாவான பழசிராஜாவின் பெயர் இந்த அணைக்கு வைக்கபட்டுள்ளது. இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பழசிராஜா பிறந்த ஸ்தலமும் ஒரு சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணூர் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் இந்த அணைத்தேக்கத்தில் படகுச்சவாரி சேவைகளை பயணிகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அணையை ஒட்டியே உள்ள ஒரு தோட்டப்பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்காக கொண்டுள்ளது.

பழசிராஜா சிலை மற்றும் புத்தர் மலை ஆகிய இரண்டும் இந்த அணைப்பகுதியின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அறியப்படுகின்றன. பழசி அணைப்பகுதி மற்றும் அதை ஒட்டிய பூங்காத்தோட்டம் ஆகியவை பள்ளிக்குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லவும், குடும்பத்துடன் பிக்னிக் சிற்றுலா செல்லவும், ஒருநாள் விடுமுறையை கழிக்கவும் ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Jul,Thu
Return On
24 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Jul,Thu
Check Out
24 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Jul,Thu
Return On
24 Jul,Fri