ஹனுமாரம்பலம் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ஸ்ரீ ராகவபுரம் கோயில் கொல்லம் மாவட்டத்திலுள்ள முக்கிய கோயிலாகும். கேரள மாநிலத்தில் ஆஞ்சநேயருக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்று. கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலுள்ள செறுத்தாழம் எனும் சிறிய கிராமத்தில் இது அமைந்துள்ளது.
எட்டாம் நூற்றாண்டு வரை பின்னோக்கி நீளும் பிரசித்தமான தலபுராணத்தை இக்கோயில் கொண்டுள்ளது. இப்பகுதியை ஆண்ட ‘உடைய வர்மன் கோலாத்திரி’ எனும் எனும் அரசனால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.
கோயில் கட்டுமானம் முடிந்தபிறகு துளுநாடு (இது தற்போது கர்நாடக மாநிலத்தின் அங்கமாக உள்ளது) பகுதியிலிருந்து 37 பிராம்மணக் குடும்பங்கள் வரவழைக்கப்பட்டு இந்த கோயிலானது அந்த வேதியர்களிடம் உரிமதானம் செய்யப்பட்டது என்று தலபுராணம் கூறுகிறது.
இந்த கோயிலின் பிராம்மண அர்ச்சகர்கள் மகர மாதத்தில் (ஜனவரி-பிப்ரவரி) நடத்தப்படும் ஒரு திருவிழாச்சடங்கின்போது ராமர், சீதா, ஹனுமான், சிவன், துர்க்கை ஆகியோரின் சிலைகளை தலைகளில் வைத்தபடி ஆடுகின்றனர்.
‘திடம்பு நிருத்தம்’ என்று அழைக்கப்படும் இந்த தனித்தன்மையான நடனச்சடங்கை பார்த்து ரசிப்பதற்காக கேரளாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக கூடுகின்றனர்.



Click it and Unblock the Notifications