Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்

ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கண்ணூர்

84

கண்ணூரிலுள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் பய்யனூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. விஷ்ணு பஹவானின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் இக்கோயிலுக்கு திருமுழுக்கு செய்வித்ததாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

பழமையான புராணக்கதைகளை தன் பின்னணியில் கொண்டுள்ள இக்கோயில் ஹிந்து மஹா புராண நூல்களில் ஒன்றான ‘பிரம்மாண்ட புராண’த்திலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

பக்தர்களையும் பயணிகளையும் வசீகரிக்கும் விசேஷமான கட்டமைப்பை இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் பெற்றுள்ளது. 12 அடி உயரத்தில் காணப்படும் இந்த கோயிலின் வெளிச்சுவர் அமைப்பே வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

அது மட்டுமல்லாமல் 3 ஏக்கர் பரப்பளவில் மொத்த கோயில் வளாகமும் பரந்து விரிந்து காணப்படுகிறது. கோயில் கருவறை ஒரு யானையின் பின்புறம் போன்ற தோற்றத்துடன் இரண்டு அடுக்குகளைக்கொண்டு காணப்படுகிறது.

இங்கு கொடிக்கம்பம் எனும் அமைப்பு இடம் பெறாதது இந்த கோயிலின் மற்றொரு வித்தியாசமான அம்சமாக கருதப்படுகிறது. தென்னிந்திய மரபுக்கோயில்களில் கொடிக்கம்பம் இடம் பெற்றிருப்பது பொதுவாக காணப்படும் அம்சமாகும்.

இந்த கோயிலின் வாசலில் உள்ள இலஞ்சி மரம் எல்லா பருவத்திலும் பூத்துக்காணப்பட்டாலும் காய் காய்ப்பதில்லை. இதுவும் ஒரு ஸ்தல அதிசயமாக பக்தர்களால் கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Mar,Wed
Return On
19 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Mar,Wed
Check Out
19 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Mar,Wed
Return On
19 Mar,Thu