கண்ணூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலுள்ள சுந்தரேஸ்வரா கோயில் ஒரு முக்கியமான ஆன்மீக திருத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. நவீன கேரளாவின் முக்கியமான ஆன்மிக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயணகுரு இந்த ஆன்மீக மையத்தை 1916ம் ஆண்டில் நிறுவியுள்ளார். வரலாற்று சான்றுகளின்படி நாராயண குரு ஸ்தாபித்த நான்கு கோயில்களில் இதுவே முதன்மையானது என்பதாக குறிப்பிடப்படுகிறது.
சுந்தரேஸ்வரர் ரூபத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான் இந்த கோயிலின் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சுந்தரேஸ்வரர் எனும் பெயருக்கு அழகுக்கடவுள் என்பது பொருளாகும்.
தென்னிந்தியாவிலுள்ள ஒருசில கோயில்களைப் போல் அல்லாமல் இக்கோயில் எல்லா வகுப்பினருக்கும் திறந்துவிடப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்-மே மாதத்தின்போது இக்கோயிலின் முக்கியமான திருவிழா கொண்டாடப்படுகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாக் கொண்டாட்டங்களின்போது கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் மற்றும் ஊர்வலங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன.
வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்த கோயிலுக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் விழாக்கொண்டாட்டங்களை ரசிக்க விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு வருகை தருவது சிறந்தது.



Click it and Unblock the Notifications