காரைக்குடி நகர், மஹரநோன்பு பொட்டலிலுள்ள காந்தி சதுக்கம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இச்சதுக்கத்தில், பல பிரபலங்கள் அருமையான சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளனர்.
காரைக்குடிக்கு முதன்முதலாக ஒரு பிரபலம் வருகை தந்தது 1906-ம் ஆண்டில் தான். புரட்சிகர தமிழ் கவிதைகள் மற்றும் எழுத்துக்களைப் படைத்த பெரும் புரட்சிக் கவிஞரான சுப்ரமண்ய பாரதி இந்நகருக்கு விஜயம் செய்து, இவ்வூரின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட செட்டியார் இளைஞர்களைப் பாராட்டி, காந்தி சதுக்கத்தில் நின்றவாறு, ஒரு கவிதையைப் படித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், இந்திய சரித்திரத்தின் விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக, இன்றும் உள்ளது.
தேசப்பிதா காந்தியடிகள், 1972-ம் ஆண்டு காரைக்குடிக்கு வந்து, ஒன்றல்ல, இரண்டு சொற்பொழிவுகளை இச்சதுக்கத்தில் ஆற்றினார். அதனாலேயே, இச்சதுக்கம் அன்னாரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களும், 1948-ம் வருடம் சிஇசிஆர்ஐ –ன் மையத்தை திறந்து வைக்க, இந்நகருக்கு வந்திருந்தார். அவரும் இச்சதுக்கத்தில் நின்று உரையாற்றியுள்ளார்.



Click it and Unblock the Notifications