விவரன் கோயில், காரைக்குடி நகரை மதுரை நகரோடு இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. காரைக்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயில், உள்ளூர் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்ஸிகள் மூலம் எளிதில் அடையக்கூடியதாகவே உள்ளது.
சிவபெருமானின் அவதாரங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பைரவருக்காக எழுப்பபட்டது இக்கோயிலாகும். நாள்தோறும், பைரவரின் அருளை வேண்டி இங்கு வரும் பக்தர்கள், அவருக்கு பல வகையான நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
கோயிலுக்கு வெளியே ஒரு நீரூற்று உள்ளது. பைரவரை வணங்கச் செல்லும் யாரும் தன் சுயத்தோடு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
புராணங்கள், இக்கோயிலோடு ராமபிரானுக்கு தொடர்பிருப்பதாகக் கூறுகின்றன. இங்கு ராமர், தன் மனைவி சீதை இலங்கையில் உயிரோடு, பத்திரமாக இருப்பதாக, ஹனுமானிடமிருந்து அறிந்து கொண்டார்.
அவள் பத்திரமாயிருக்கும் செய்தியைக் கேட்டு, அதற்கு சான்றாக அவளது நகைகளையும் கண்ணுற்ற ராமபிரன் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு ஹனுமானுக்கு நன்றி நவின்றதாகக் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications