கரவ்ளி நகரத்துக்கு வெகு அருகில் மசால்பூர் துணை வட்டத்தில் இந்த திமான்கர் கோட்டை அமைந்துள்ளது. வரலாற்று நிபுணர்கள் இது 1100ம் வருடத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இருப்பினும் இது ஒரு தாக்குதலில் அழிக்கப்பட்டு 1244ம் ஆண்டில் விஜய் பால் வம்சத்தை சேர்ந்த யதுவன்ஷி ராஜ திமான்பால் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அஷ்டதாது எனப்படும் கற்சிற்பங்கள் இந்த கோட்டை வளாகத்திலுள்ள கோயில்களின் அடியில் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. ஜியோமிதி வடிவ மற்றும் மலர் வடிவ சிற்ப வடிப்பு அம்சங்கள் இங்குள்ள கோயில்களின் கூரைகளிலும் தூண்களிலும் இடம்பெற்றுள்ளன. பல கடவுள்களின் உருவங்களும் இங்குள்ள தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த கோட்டையில் காணப்படும் ஆவணங்களிலிருந்து இந்த கோட்டை 1196 லிருந்து 1244 வரை கோரி முகம்மது படைகளின் ஆளுகைக்குள் இருந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது. கோட்டைக்கு அருகில் உள்ள சாகர் ஏரியில் ஒரு ‘பரஸ்’ கல் அமைந்திருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications