Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » கர்ணால் கோல்ஃப் மைதானம்

கர்ணால் கோல்ஃப் மைதானம், கர்ணால்

27

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு கோல்ஃப் விளையாட்டு அறிமுகம் செய்விக்கப்பட்டது. இந்த விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் முதல் கோல்ஃப் மைதானத்தை 1829ம் ஆண்டு கல்கத்தா நகரத்தில் அமைத்தனர்.

இது ராயல் கல்கத்தா கோல்ஃப் கோர்ஸ் என்று அழைக்கப்பட்டது. தற்போது நாட்டிலுள்ள மிகப்பழமையான கோல்ஃப் மைதானமாக இது அறியப்படுகிறது. அதனை தொடர்ந்து பாம்பே, பெங்களூர், ஷில்லாங், டெல்லி போன்ற நகரங்களில் கோல்ஃப் மைதானங்கள் அமைக்கப்பட்டன.

காலப்போக்கில் இந்த விளையாட்டு பிரபல்யமடைந்து ஏற்பட்டு பல சிறு நகரங்களிலும் கோல்ஃப் மைதானங்கள் உருவாகின. ஏரிகள், தேயிலைத்தோட்டங்கள், காட்டுப்பகுதி, பாலைவனம் ஆகிய இயற்கைச்சூழலை ஒட்டியதாக இவை ஆங்கிலேய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டன.

கர்ணால் நகரத்தின் அமைப்பு கோல்ஃப் மைதானத்துக்கு ஏற்றதாகவே இருந்ததால் ஹரியானா அரசு இப்பகுதியில் மேற்கு யமுனி கால்வாயை ஒட்டி ஒயசிஸ் வளாகத்துக்கு அருகே இந்த கோல்ஃப் மைதானத்தை அமைத்தது.

NH 1 எனப்படும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் இந்த மைதானம் அமைந்துள்ளது. சாலையின் அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதை வழியாக கோல்ஃப் ஆட்டக்காரர்கள் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்ல முடியும்.                      

ரம்மியமான இயற்கைச்சூழலின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோல்ஃப் மைதானம் கர்ணா ஏரி மற்றும் ஒயசிஸ் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுக்கு அருகில் உள்ளது. இது நாட்டிலுள்ள முக்கியமான கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாக தற்போது பிரசித்தமாக அறியப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu