கர்னாலாவுக்கு அருகில் உள்ள தீவாலே எனும் கிராமத்தில் இந்த அழகிய பவானி கடகேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் லட்சுமி தேவியின் அழகிய விக்கிரகம் உள்ளது.
புராதனமான, சில நூற்றாண்டுகள் பழமையை உடைய இந்த திருக்கோயில் ஒரு மலையுச்சியில் குளங்கள் சூழ அமைந்துள்ளது. இங்கு சில புத்த மத குடைவறை குகைக்கோயில்களும் அமைந்துள்ளன.
ரம்மியமான இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து சுற்றிலுமுள்ள பிரமிக்கவைக்கும் இயற்கை வனப்பை பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications