இந்த பழமையான சிவன் கோயில் கர்னாலாவுக்கு அருகில் அம்பர்நாத் பகுதியில் அமைந்துள்ளது. சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் ஷிலாஹரா வம்சத்தை சேர்ந்த் மான்முனிராஜா என்பவரால் 1060 ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் உட்பகுதி அற்புதமான வெகு நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இந்த சிற்பங்கள் வைஷ்ணவ மற்றும் சைவ புராணக்கதைகளை விவரிக்கின்றன.
சிவராத்திரி திருநாளின்போது இக்கோயில் ஏராளமான பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. சிவனின் அருளைப்பெறுவதற்காக அந்நாளில் சிவபக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
சைவமும் வைணவமும் ஒன்று சேர்ந்து பின்பற்றப்படும் வெகு சில விசேஷமான கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும். இரு தரப்பு பக்தர்களும் இங்கு வருகை தந்து வழிபடுகின்றனர்.



Click it and Unblock the Notifications