ஸ்ரீ க்ஷேத்திர குரு மடம் என்று அழைக்கப்படும் இந்த ஆன்மீக யாத்ரீக மையம் 1906ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. சஹாயாத்திரி மலையில் அமைந்துள்ள இந்த ஆன்மீக மையம் ஷீமத் பரஹம்ஸ பத்மநாபதீர்த்தரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து பார்த்தால் காளி ஆறு மற்றும் அரபிக்கடல் போன்றவை அழகாக தெரிகின்றன. ஸ்ரீ க்ஷேத்திர பாட் மட்’ என்றும் அழைக்கைப்படும் இது வேதக்கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்தலம் ஸ்ரீ பத்மநாபதீர்த்தரின் கருத்துகளில் ஆர்வம் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் கட்டாயம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். ‘தத்துவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மையே பிரதானம்’ என்பது போன்ற அவரது போதனைகள் பலராலும் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications